Monday, August 20, 2012

[Findings] நவீன பாவனை ஓவியர் பாஸ்குவிட்


















ஜேன் மைக்கேல் பாஸ்குவிட் ஒரு "பாப் ஐகான்" சுவர் சித்திரக்காரர், இசை கலைஞர், நவீன பாவனை ஓவியர்,கலாச்சார முகம் கொண்டவர்...இப்படி பன்முகம் கொண்டவர்.

சிறு வயதில் இவர் வித்தியாசமானவராக இருந்தார். நான்கு வயதில் ஒரே நேரத்தில் ஒன்றை படித்தபடியே இன்னொன்றை எழுதவும் செய்தான். பதினோரு வயதில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிய மொழி புலமை பெற்றிருந்தான்.  15 வயதில் வீட்டை விட்டு ஓடி வாஷிங்டன் ஸ்கொயர் சதுக்கத்தில் சுற்றி திரிந்தான்.  போலீஸ் கைது செய்து வீட்டில் சேர்த்தது. பத்தாவது கிரேடிற்கு மேல் படிக்கவில்லை.  அவனது தந்தை உதைத்து வீட்டை விட்டு துரத்தி விட்டார். வலியோடு நண்பர்களின் உதவியோடு வாழ்ந்தான்.  டி-சர்ட்களையும் கையால் தயாரித்த போஸ்ட் கார்டுகளையும் விற்றான்.

1970-ல் பாஸ்குவிட் ஸ்ப்ரே முறையில் சுவர் ஓவியங்களை மன்ஹட்டனில் வரைந்து தள்ளினார்.  அப்போது தான் நாலுபேருக்கு தெரிந்தவரானார்.  1979-ல் டி.வி ஷோகளில் தலைகாட்டினார். "க்ரே" எனும் ராக் பேண்டில் இருந்தார். இப்படி நியூயார்கில் மெல்ல மெல்ல புகழ்பெற்றார்.   இந்த கால கட்டத்தில் ராப்சு [Rapture] எனும் வீடியோ ஆல்பத்தில் தோன்றினார்.

1982-ல் மடோனா, டேவிட் போவி (இசையமைப்பாளர்),ஆன்டிவார்ஹோல் (ஓவியர்) இவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. ஸ்பாட் பெயின்டிங்கில் அதாவது பொது இடங்களில் வரைந்து தள்ளினார். இவரின் ஒரு ஓவியம் அப்போது ஆயிரம் டாலர் விலை போனது.  1986-ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கவர் ஸ்டோரி - அட்டையில் வரும் அளவு புகழ் பெற்றார்.

வெற்றியடைந்த ஒரு ஓவியர் வாழ்வில் ஹெராயின் எனும் அரக்கன் நுழைந்தது. போதைக்கு அடிமையாகி, அதிக அளவு ஹெராயின் போதையினால் 1988-ல் மரணித்தார்.

இவரின் வாழ்க்கை படமாக்கப்பட்டது. இவரின் உழைப்பு மற்றும் வாழ்க்கை புத்தகங்கள், கவிதைகள் மற்றும் கதை சொல்லும் ஓவியங்களில் வாழ்கிறது.


Popular Posts