Sunday, September 23, 2012

[ Findings ] லுவனிஸ் கடல்சார் ஓவியங்கள்


















[ Findings ] லுவனிஸ் அல்டமெளரஸ் Loannis Altamouras  [1852-1878]

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஓவியர்களுள் ஒருவர்.

இத்தாலியில் ஓவிய குடும்பத்தில்  பிறந்தவர் லுவனிஸ் அல்டமெளரஸ். இவரின் தந்தையும் தாயும் பிரபல ஓவியர்கள்.  தந்தை ஒரு இத்தாலிய ஓவியர் ப்ரான்ஸிஸ்கோ சாவீரோ அல்டமுரா -[ Francesco saverio Altamura ] தாயார் எலினி பெளகுரா [Eleni Boukoura] கிரீஸின் ஸ்பெட்சய் தீவின்  முதல் பெண் ஓவியர் .

இவரின் ஏழு வயதில் தந்தை தாய் பிரிந்து விட்டனர்.  இவரை சிறந்த ஓவியராக்கிய பெருமை தாயாருக்கே சேரும். 

அரசர் இரண்டாம் ஜார்ஜின் ஸ்காலர்ஸிபில் படித்தவர்.  ஓவியம் இவரின் உயிர் மூச்சாக இருந்தது. கடல் மற்றும் கடல் சார்ந்த ஓவியங்களே இவரின் சிறப்பு. 

ஏதென்ஸ் ஒலிம்பியனில் இரண்டாம் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியம் தி போர்ட் ஆப் கோபென்ஹாகன் - the port of copenhagon

இதன் பிறகே இவரது ஓவியங்கள் பிரபலம் ஆயின. 

விதி வலியது என்று சொல்வார்கள் இவரையும் விட்டு வைக்கவில்லை  தனது 26 வயதில் டியூபர் குலோசிஸ் நோய் தாக்கி இறந்துவிட்டார். 
இவரின் இறப்பு தாயாரை பைத்தியமாக்க செய்தது.

இவர் இறப்பிற்கு முன் 1878 ல் மூன்று ஓவியங்கள் பாரிசில் நடை பெற்ற உல ஓவிய கண்காட்சியில் சிறப்பாக பேசப்பட்டது. [Papanikolis, Eressos, Naval Battle]

ஏனோ தெரியவில்லை புகழ் வாய்ந்த ஓவியர்கள் வாழ்க்கை சோகம் தழுவியதாக உள்ளது.

நோசனல் கேலரி ஆப் ஏதென்ஸ் மற்றும் மியூசியத்தில் [கிரீஸ்] இவரின் அநேக ஓவியங்கள் அழங்கரிக்கின்றன.





3 comments:

  1. படங்கள் அருமை...

    நீங்கள் குறிப்பிட்டது போல் சோகம் நிழலாடுகிறது...

    நன்றி...

    ReplyDelete
  2. வாவ்....சைட்டு புதுசா தல...

    படம் காட்டுறீங்களே! :)

    ReplyDelete
  3. //திண்டுக்கல் தனபாலன்September 24, 2012 9:48 AM//

    முதலில் தங்கள் வருகைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    //வரலாற்று சுவடுகள்September 25, 2012 8:20 AM//

    ஆமாம் ஓவிய ஆர்வத்தின் காரணமாக துவக்கப்பட்டது. இதில் ஓவியம் பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி நண்பரே

    ReplyDelete

Popular Posts