Tuesday, February 4, 2014

மா கலைஞன் மைகேலேஞ்சலோ


மறுமலர்ச்சி காலத்தின் மிகச்சிறந்த கலைஞர் மைகேலேஞ்சலோ (Michelangelo
Buonarroti). சிற்பக்கலை, ஓவியர், கட்டிடக் கலை நிபுநர், கவிஞர், இப்படி பல பரிமாணங்கள் கொண்ட சகலகலா வல்லவராக திகழ்ந்தார்.   இவரைப் போல எந்த ஓவிய கலைஞனும் நிர்வாண ஓவியங்களை தத்ரூபமாக (perfection) வரைந்ததில்லை எனச் சொல்லுவார்கள்.


அரீஜோ வில் (டஸ்கெனி ,உயர் குடியில் பிறந்தவர்.  டொமினிகோ கிர்லேண்டையோ (Domenico  Ghirlandaio ) எனும் ஓவியரிடம் தற்காலிக பணியாளராக சேர்ந்து கற்றுகொண்டார்.  பின் லோரென் ஜோ டி மெடிசி,இவரிடன் ஓவிய கலை நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார். ஆசானின் மறைவுக்குப் பின் ரோமுக்கு பயணமானார்.




















அங்குதான் "sorrowful Pietà," எனும் மார்பிள் சிற்பங்களைப் படைத்தார். இந்த சிற்பம் கன்னி மரியாள் இறப்புக்குப் பின் யேசுவை மடியில் கிடத்தி இருப்பது போன்ற சிற்பம்.  "டேவி" நிர்வாண சிலை மாஸ்டர் பீஸ், இது ப்ளோரன்ஸ் தேசத்தில் உள்ளது (1504).

அதற்கு அடுத்த வருடத்தில் போப் இரண்டாம் ஜூலியஸ் இவருக்கு பாபல் (papal tomb) தேவாலயத்தில் பெரிய சிற்ப வேலையை கொடுத்தார் ஆனால் அது முழுமை அடைய வில்லை என்று சொல்லுகிறார்கள். இதற்கிடையில் சிஸ்டைன் சாபல் கூறை ஓவியங்களை வரைகிறார். தயக்கம் காட்டிய அவரை ஜூலியஸ் தான் அந்த பணியை முடிக்க வேண்டும் என அன்பு கட்டளை இடுகிறார்.  அப்போது அவருக்கு வயது 37 .  இதை பற்றி ஒன்று கேள்விப்பட்டது ஜீலியஸிடம் வரைய ஒப்புக்கொண்ட மைகேலேஞ்சலோ தான் சொல்லும் வரை யாரும் அதில் நுழைந்து ஓவியங்களை பார்க்க கூடாது என்று கராராக சொல்லி வேலையை துவங்குகிறார்.

ஆறுமாதமாகியும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற பேராவல் ஏற்படுகிறது ஜூலியஸிற்கு, அவர் இல்லை என நினைத்து உள்ளே செல்ல எதிர்பாராமல் இதை மைகேலேஞ்சலோ பார்த்துவிட்டு கோபத்துடன் கூரையில் வரைந்த ஓவியங்களின் மேல் பெயின்டை ஊற்றி விட்டார். பின் நீண்ட சமாதானத்தின் பின் அந்த அருமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்களை திரும்ப படைத்தார்.

"தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட் " கட்டிடக் கூறையின் மேல் அமைத்த இன்னொரு ஓவியம் போப் மூன்றாம் பாலின் வேண்டுதலுக்கு வரைந்து கொடுத்தார்.  கட்டிட மேற்கூரையில் ஓவியம் வரைவது என்பது எத்தகைய கடினமான பணி. நான்கு ஆண்டுகளிலே 300 கும் மேற்பட்ட ஓவியங்களை தீட்டினார்.
1546 ல் ரோமில் உள்ள செயின் பீட்டர் கதீட்ரல் இவரின் கட்டிடக் கலை சிறப்பிற்கு சான்று பகர்கிறது.

இறுதி காலங்களில் இவர் கட்டிடக் கலையில் அதிகம் ஈடுபட்டார்.  ரோமில் இவர் மறைந்தார்.

மைகேலேஞ்சலோ
Michelangelo [1475 - 1564]

Popular Posts